உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணர் ஜெயந்தி விழா

Published On 2023-09-08 07:18 GMT   |   Update On 2023-09-08 07:18 GMT
  • சோழவந்தான் அருகே கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
  • உறியடி போட்டி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடந்தது.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட மேல்நாச்சிகுளம் கிராமத்தில் கிருஷ்ணன் கோவிலில் வருடம் தோறும் கிருஷ்ணன் ஜெயந்தி விழா நடந்து வருகிறது. இதே போல் இந்த ஆண்டு 3 நாட்கள் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடந்து பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முக்கிய விழாவான உறியடி போட்டி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடந்தது.

இந்தப் போட்டியில் டிரைவர் கண்ணன் (வயது41) இளவட்டக் கல்லை தூக்கி போட்டியில் வெற்றி பெற்றார். இங்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 4 அடியில் கிருஷ்ணர் சிலை நிறுவப்பட்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா நிறைவு பெற்றவுடன் இந்த சிலை குலுக்கல் முறையில் கிராமத்தில் உள்ள பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் இந்த ஆண்டு நேற்று இரவு கிருஷ்ணர் ஜெயந்திக்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலை பூஜைகள் நிறைவு பெற்று குலுக்கல் முறையில் மேல்நாச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேல் நாச்சிகுளம் கிராமமக்கள் செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

Tags:    

Similar News