உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு அரசு பரிசு பெட்டகத்தை கவுன்சிலர் போஸ் முத்தையா வழங்கினார்.

கர்ப்பிணிகளுக்கு அரசு பரிசு பெட்டகம்

Published On 2023-06-07 08:40 GMT   |   Update On 2023-06-07 08:40 GMT
  • கர்ப்பிணிகளுக்கு அரசு பரிசு பெட்டகத்தை கவுன்சிலர் போஸ் முத்தையா வழங்கினார்.
  • தி.மு.க. வட்ட செயலாளர் பாலா என்ற பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரை மாநகராட்சி 84-வது வார்டில் புதிய நகர்புற நலவாழ்வு மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வார்டு கவுன்சிலர் போஸ் முத்தையா குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

பின்னர் இல்லம் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு அரசின் மருந்து பெட்டகப்பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் மருத்துவர்கள் அம்பிகா, வினோத், வார்டு உதவி பொறியாளர் முருகன், தி.மு.க. வட்ட செயலாளர் பாலா என்ற பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள நலவாழ்வு மையத்தில் சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த அழுத்த பரிசோதனை, பெண்களுக்கு கருப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படும். மேலும் பல்வேறு நோய்களுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி மருந்துகள் வழங்கப்படம். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இல்லம் தேடி திட்டத்தின் கீழ் மருந்துகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News