உள்ளூர் செய்திகள்

நடுரோட்டில் வேன் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம். 

கார் மோதி பெண் பரிதாப சாவு; வேன் கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயம்

Published On 2023-06-24 13:46 IST   |   Update On 2023-06-24 14:25:00 IST
  • கார் மோதி பெண் பரிதாப சாவு; வேன் கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
  • சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கீழவளவை சேர்ந்தவர் பாண்டி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்லம்மாள்(வயது35). இவர் நேற்று மாலை அட்டப்பட்டி சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக செல்லம்மாள் மீது மோதியது. அதே வேகத்தில் கார் ரோட்டில் இருந்து வயலில் புகுந்தது.



பலியான செல்லம்மாள்

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேங்கையன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் மேலூர் ராஜேந்தி ரன் என்பவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தனது உறவினருக்கு பெண் பார்ப்பதற்காக குடும்பத்துடன் திருச்சி மாவட்டம் லால்குடிக்கு வேனில் சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று இரவு வேனில் விஜய குமார் மற்றும் குடும்பத்தினர் ஊருக்கு புறப்பட்டனர். வேனை இசக்கிமுத்து என்பவர் ஓட்டி வந்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையின் நடுவே மாடு சென்றது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் வேனை திருப்பினார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பஸ் நிறுத்தம் முன்பு தலைக்குப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்த வர்கள் கூக்குரலிட்டனர். உடனே அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் விஜயகுமார், வெங்கடேஷ், பால்ராஜ் மற்றும் பெண்கள் என 13 பேர் காயமடைந்தனர். இவர்கள் மேலூர் மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News