உள்ளூர் செய்திகள்

அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் பூமிநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தபோது எடுத்த படம்.

இலவச அமரர் ஊர்தி வசதி அதிகளவில் ஏற்படுத்தி தரவேண்டும்

Published On 2023-05-27 08:29 GMT   |   Update On 2023-05-27 08:29 GMT
  • இலவச அமரர் ஊர்தி வசதி அதிகளவில் ஏற்படுத்தி தரவேண்டும்.
  • அமைச்சரிடம் பூமிநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.

மதுரை

மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பூமிநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக நோயாளிகள் வருகை தரக்கூடிய அரசு மருத்துவ மனையாக மதுரை ராஜாஜி மருத்துவமனை உள்ளது.

இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வயது முதிர்ந்த நோயாளிகள் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைவதும், விபத்தில் பலியாகும் உடல்கள் பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதும் அதிகளவில் உள்ளது.

நாள் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்ட மரணம் அடைந்த வர்களின் உடல் அவர்களின் சொந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல போதிய இலவச அமரர் ஊர்தி இல்லாமல் அதிக நேரம் மருத்துவ மனையில் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

இங்கு சிகிச்சை பலனின்றி விபத்துக்கு உள்ளாகி இறப்பவர்கள் அதிகம் பேர் ஏழை குடும்பத்தினர் தான். அவர்களுக்கு தனியார் அமரர் ஊர்தியில் பணம் செலுத்தி உடலை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே அரசு சார்பில் அதிக அளவில் இலவச அமரர் ஊர்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News