உள்ளூர் செய்திகள்

இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம்

Published On 2023-09-22 06:59 GMT   |   Update On 2023-09-22 06:59 GMT
  • தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நடந்தது.
  • இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச கருத்த ரித்தல் பரிசோதனை முகாம் உசிலம்பட்டியில் வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது.

முகாமில், தொடர்ச்சி யாக கருசிதைவால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லாதவர்கள், கருக்குழாய் அடைப்பு உள்ளவர்கள், விந்தணு குறைபாடு உள்ள வர்கள், கர்ப்பப்பையில் நீர்கட்டி உள்ளவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.

மேலும் ஆண், பெண்க ளுக்கான குழந்தையின்மை பிரச்சனைகள், கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள், கர்ப்பப்பையில் விந்தணு உட்செலுத்தும் முறை, செயற்கை கருத்தரித்தல், ஹார்மோன் சிகிச்சைகள், விந்தணுவை விதைப்பை யில் இருந்து பிரித்தெடுத்தல், விந்தணு கருமுட்டை மற்றும் கருவை தானமாக பெறுதல், விந்தணு கருமுட்டை மற்றும் கரு உறைநிலைப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சி னைகளுக்கு முகாமில் இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)உசிலம்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சரஸ்வதி மஹாலிலும்,

25-ந் தேதி திங்கட்கிழமை தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையிலும் கருத்தரித்தல் முகாம் நடக்கிறது.

முகாமில் பங்கேற்ப வர்களுக்கு பத்தாயிரம் மதிப்புள்ள மருத்துவ பரிசோதனைகள் இலவச மாக செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்க 89258-01358 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்யலாம். இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News