- விவசாயி-லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டனர்.
- டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே பெரிய உலகாணியை சேர்ந்தவர் முத்துராமு (வயது34), விவசாயி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாக வில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த அவர் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மருந்தை குடித்துவிட்டார்.
மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அவரது மகன் மணிமாறன் கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கரையாம்பட்டியை சேர்ந்தவர் முத்தையா (வயது42), லாரி டிரைவர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட தால் சுமதி, கணவரை பிரிந்து சென்று தனது தாய் வீட்டில் சித்து வருகிறார்.
இந்தநிலையில் விரக்தியில் இருந்து வந்த முத்தையா டி.கல்லுப்பட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டி இரும்பு படிக்கட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.