உள்ளூர் செய்திகள்

மாநாட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

தி.மு.க.வை சம்ஹாரம் செய்யும் அவதாரம் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி

Published On 2023-08-21 12:29 IST   |   Update On 2023-08-21 12:29:00 IST
  • எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை சம்ஹாரம் செய்யும் அவதாரம் எடுத்துள்ளார்.
  • மதுரை மாநாட்டில் செல்லூர் ராஜூ பேசினார்.

மதுரை

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு அ.தி.மு.க. பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல லட்சம் தொண்டர்கள் திரண்டனர். மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும் என்று நம் புரட்சித் தலைவர் பாடினார் அதுபோல அவர் கழகத் தொண்டர் களை தனது உயிராக நினைத்தார்.

அவரது புகழும் நிலைத்து வருகிறது. அவரது வழியில் புரட்சித்தலைவி அம்மா ஒன்றரை கோடி தொண்டர் களையும் தனது வாரிசாக நினைத்து செயல்பட்டு கழகத்தையும் ஆட்சியையும் சிறப்பாக நடத்தினார். புரட்சித்தலைவி அம்மா வழியில் பொதுசெயலாளர் எடப்பாடியார் இப்போது தமிழக மக்களின் முதல்வராக, வருங்கால முதல்வராக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூக்கமின்றி தவித்து வருகிறார். மதுரை மாநாட்டை பார்த்த பிறகு இனி அவருக்கு தூக்கமே வராது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு இந்த மண்ணாகும் இந்த மண்ணில் இருந்து வெற்றி வாகை சூடிட எடப்பாடி யாருக்கு வைரவேல் கொடுத்துள்ளோம்.

அந்த வேல் எதற்காக கொடுத்தோம் என்றால் தி.மு.க. ஆட்சியை சம்ஹாரம் பண்ண போகிற ஆறுச் சாமியாக அவதாரம் எடுத்துள்ளார் நமது எடப்பாடி பழனிசாமி. மதுரை மீனாட்சி பட்டி னத்திற்கு பல பெருமை உண்டு. இது ராசியான மண் கடந்த 1973-ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருப்பரங்குன் றத்திற்கு வந்தார். அவர் வந்த ரெயில் 10 மணி நேரம் தாமதமானது.

மகாத்மா காந்தி கூட மதுரை வரும்போது 6 மணி நேரம் தான் தாமதம் ஏற்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு மதுரையில் புரட்சித்தலைவி அம்மா நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க.வை சுமார் 10 ஆண்டு காலம் வனவாசம் செல்ல வைத்தது. இன்றைக்கு மதுரையில் எடப்பாடி பழனிசாமி வீர உரை யாற்றியுள்ளார்.

எனவே இந்த மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. வருகிற 2024 தேர்தலில் நமது எடப்பாடியார் சுட்டிக்காட்டுகின்ற வேட்பாளர் தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவது உறுதி. அதை ஒவ்வொரு தொண்டனும் லட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். விரைவில் தமிழகத்தில் எடப்பாடியார் சிறப்பான ஆட்சியை கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர். அதற்கு மீனாட்சி பட்டணமே சாட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News