உள்ளூர் செய்திகள்

சீரமைக்கப்பட்ட கால்வாய்.

வாய்க்காலை சீரமைத்து பாசன வசதி

Update: 2022-06-30 09:42 GMT
  • தூர்வாரப்படாத வாய்க்காலை சீரமைத்து பாசன வசதி தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.
  • போதிய நீர்பாசன வசதி ஏற்படுத்தித்தர நீதிபதி உத்தரவிட்டார்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பெரியாறு வைகை வடி நில கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிபட்டி பிரிவு–-1ன்கீழ் உள்ள ஆண்டிபட்டி மடைகள் மூலம் கட்டக்குளம் பிரிவின்கீழ் சுமார் 150 ஏக்கர்பயன் பெற்றுவந்தது.

இந்த நிலையில் 4 வழிச்சாலை அமைத்த போது அந்த வாய்க்கால் சேதம் அடைந்தது. இதனால் கடந்த 20 வருடங்களாக விவசாய நிலங்களுக்கு தேவையான பெரியார் பாசன பங்கீட்டு நீர் பாசன வசதி இல்லாமல் தடைபட்டிருந்தது.

இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயி தங்கராஜ் விவசாயிகள் சார்பில் பலமுறை பொதுப்பணித்துறை, வருவாய் துறை என பல்வேறு அரசுத்துறை னரிடம் முறையீடு செய்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மதுரை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினியிடம் மனு கொடுத்தார்.

இந்த மனு தொடர்பான விசாரணையில் மதுரை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பெரியார் வைகை வடி நில பிரிவு -1 அதிகாரிகளுக்கு 400 மீட்டர் நீளமுள்ள நீர்பாசன கால்வாயை தூர்வாரி சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய போதிய நீர்பாசன வசதி ஏற்படுத்தி தர உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி 400 மீட்டர் நீளமுள்ள நீர் பாசன கால்வாய் தூர்வாரப்பட்டு விவசாய நிலங்களுக்கு தேவையான நீர் செல்ல வழிவகை ஏற்படுத்தபட்டுள்ளது.

இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த 150 ஏக்கர் விவசாய நிலத்திற்கு தேவையான நீர்பாசன வசதி பெற்று பயனடைந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது போன்ற பொது சேவை பயன்பாட்டில் குறைபாடுகள் தொடர்பான மனுக்களை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் எந்தவித கட்டணமின்றி விசாரித்து விரைவில் நிவாரணங்களை சட்டப்படி பெற்றுகொள்வதற்கான வழிவகைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என நிரந்த மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ரஜினி தெரிவித்தார்.

நிரந்தர மக்கள் நீதிமன்றமானது மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாற்று சமரச தீர்வு மைய கட்டடிடத்தில் அனைத்து நீதிமன்ற வேலைநாட்களிலும் செயல்பட்டு வருகிறது.

Tags:    

Similar News