உள்ளூர் செய்திகள்

மாவட்ட செயலாளர் மணிமாறன் நேர்காணல் நடத்தியபோது எடுத்த படம்.

திருமங்கலத்தில் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப உறுப்பினர்களுக்கு நேர்காணல்

Published On 2023-03-31 13:30 IST   |   Update On 2023-03-31 13:30:00 IST
  • தி.மு.க. தகவல் தொழில் நுட்ப உறுப்பினர்களுக்கு நேர்காணல் நடந்தது.
  • மாற்று கட்சியினர் கண்ணிய மில்லாமல் நம்மை விமர்சனம் செய்வார்கள்.

திருமங்கலம்

மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணிக்கு புதிய நிர்வாகிகளுக்கான நேர்கா ணல் திருமங்கலத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் மணிமாறன் நேர்காணல் நடத்தினார். இதில் திருமங்கலம் சட்ட மன்ற தொகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசுகையில், தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி கட்சியில் முக்கிய அணியாக உள்ளது. இந்த பிரிவு தொடங்கப்பட்டது திருமங்கலத்தில் தான். மாற்று கட்சியினர் கண்ணிய மில்லாமல் நம்மை விமர்சனம் செய்வார்கள். ஆனால் நாம் பதிலுக்கு கண்ணியத்துடன் விமர்சிக்க வேண்டும். அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்றார்.

இதில் தகவல் தொழில் நுட்ப மாவட்ட அமைப்பா ளர் ஜெயசந்திரன், துணை அமைப்பாளர்கள் பாலகாமு, கார்த்தி, சூரியா, மகளிர் துணை அமைப்பாளர் தவமணி மற்றும் தி.மு.க. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி, மதன்குமார், ஆலம்பட்டி சண்முகம், தங்கபாண்டி, வழக்கறிஞரணி அமைப் பாளர் தங்கேஸ்வரன், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன்அதியமான், பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News