உள்ளூர் செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சரவணன் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கினார்.

தி.மு.க. அரசின் பட்ஜெட் காகித பூ; மக்களுக்கு எந்த நன்மையும் தராது: முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன் பேச்சு

Published On 2023-03-21 08:39 GMT   |   Update On 2023-03-21 09:34 GMT
  • தி.மு.க. அரசின் பட்ஜெட் காகித பூ; மக்களுக்கு எந்த நன்மையும் தராது என முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன் பேசினார்.
  • தி.மு.க. தாக்கல் செய்த பட்ஜெட் ஸ்டாலின் குடும்பத்தை பாதுகாக்கும் பட்ஜெட்டாக உள்ளது.

மதுரை

ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகர் அம்மா பேரவையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட பேரவை அலுவலகத்தில் நடந்தது.

இதில் தூய்மை பணியா ளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட பேரவை செயலாளரும், முன்னாள் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.சரவணன் வழங்கி பேசியதாவது:-

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கிளைக் கழக செயலாளர், ஒரு அடிமட்ட தொண்டர் உழைப்பால் முதல்-அமைச்சராகவும், கட்சியின் பொதுச் செயலாளராக வர முடியும் என்பதற்கு உதாரணமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை, சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க. தான் காவல் அரணாக உள்ளது என்று கூறிவருவது உண்மையல்ல.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிறுபான்மை இன மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி னார்கள். புனித ஜெருேசலம் செல்லவும், மெக்கா பயணம் மேற்கொள்ளவும் சிறுபான்மையின மக்களுக்கு மானியத்தை அதி.மு.க. அரசு வழங்கியது.

மதுரை தெற்கு தொகுதியில் சவுராஷ்டிரா இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை தெப்பக் குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி 40 ஆண்டு கால கோரிக்கையை நிறை வேற்றி தந்தார் எடப்பாடி பழனிசாமி.

குறிப்பாக நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது மக்களின் கோரிக்கையான வைகை ஆற்றில் 2 தடுப்பணைகள், உயர் மட்ட மேம்பாலங்கள், மதுரை அரசு மருத்துவ மனையில் கூடுதல் கட்டி டங்கள் என மக்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் வைத்தேன்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து ஒரே ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதுதான் மக்களுக்கு பயன் தரும் பட்ஜெட்டாகும்.

தற்பொழுது 3 முறை பட்ஜெட்டை தி.மு.க. தாக்கல் செய்துள்ளது. மக்களுக்கான திட்டங்கள் எதுவுமில்லை.

தி.மு.க.வின் பட்ஜெட் காகித பூவாக உள்ளது. இந்த பட்ஜெட் மக்களுக்கு எந்த நன்மையும் தராது. கடந்த 10 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டுள்ள பட்ஜெட் மக்களை காக்கும் பட்ஜெட்டாக இருந்தது. தற்போது தி.மு.க. தாக்கல் செய்த பட்ஜெட் ஸ்டாலின் குடும்பத்தை பாதுகாக்கும் பட்ஜெட்டாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News