உள்ளூர் செய்திகள்
மதுரை நாடார் உறவின்முறை சார்பில் அன்னதானம் வழங்கல்
- மதுரை நாடார் உறவின்முறை சார்பில் சித்திரைத்திருவிழா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்ப்ட்டது.
- சுப்புராஜ நாடார்- கிருஷ்ணம்மாள் மன்றத்தில் நடந்தது.
மதுரை
மதுரை நாடார் உறவின்முறையின் சார்பில் சித்திரைத்திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா சுப்புராஜ நாடார்- கிருஷ்ணம்மாள் மன்றத்தில் நடந்தது.
மதுரை நாடார் உறவின்முறையின் துணைத்தலைவர் முத்தரசு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வி.பி.மணி முன்னிலை வகித்தார். மதுரை நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் ஜெயராஜ் நாடார் உறவின்முறை மேல்நிலைப் பள்ளி துணைத்தலைவர் செந்தில்குமார், துணைச் செயலாளர் பாஸ்கரன், காமராஜர் அறநிலைய தலைவர்-துணைத் தலைவர் சோமசுந்தரம், பொதுச்செயலாளர்கள் காசிமணி, பாலசுப்பிரமணியன்.
ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயலாளர்-தாளாளர் ஆனந்த், மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைவர் மதனகோபல் மற்றும் ஆட்சி அவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.