உள்ளூர் செய்திகள்

தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்.

அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்

Published On 2023-11-08 06:45 GMT   |   Update On 2023-11-08 06:45 GMT
  • அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.
  • நெற்பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

சோழவந்தான்

மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்த நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது சேதமடைந்து உள்ளது.

குறிப்பாக இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் கிணற்று பாசனம் மூலம் 100 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்து தற்போது அறு வடைக்கு தயாராக இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக வயல்களில் உள்ள நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி நெற் பயிர்கள் அழுகியது. இத னால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

குறிப்பாக ஒருபோக சாகுபடி மட்டுமே இந்த ஆண்டு நடைபெறும் என்ற சூழ்நிலையில் கிணற்று பாசனத்தில் நடவு செய்து அறுவடை காலத்தில் மழை பெய்ததால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆகையால் மாவட்ட கலெக்டர் விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு சேதம் அடைந்த நெற்பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News