உள்ளூர் செய்திகள்

1,459 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-09-25 09:55 GMT   |   Update On 2022-09-25 09:55 GMT
  • 1,459 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
  • தடுப்பூசி போடாத நபர்களை கண்ட றிந்து சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை

தமிழகத்தில் சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனை கட்டுபடுத்தும் வகையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி

38-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று (25-ந் தேதி) காலை 7 மணி முதல் நடந்து வருகிறது.

மதுரை மானவட்டத்தில் உள்ள வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் ஒட்டுமொத்தமாக 1,459 மையங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

கிராமப்புற பகுதிகளில் 909 மையங்களிலும், நகர பகுதிகளில் 550 மையங்களிலும் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடக்கிறது.

மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த 2 லட்சத்து 7 ஆயிரத்து 806 பேர் தகுதி பெற்று உள்ளனர். இவர்களில் 1லட்சத்து 4 ஆயிரத்து 803 பேர் ஊரக பகுதிகளிலும், 1 லட்சத்து 3 ஆயிரத்து 3 பேர் மாநகர பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

அடுத்தபடியாக பூஸ்டர் தடுப்பூசி போட 11 லட்சத்து 54 ஆயிரத்து 113 பேர் தகுதி பெற்று உள்ளனர். அவர்களில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 630 பேர் கிராமப்புற பகுதிகளிலும், 5 லட்சத்து 67 ஆயிரத்து 483 பேர் மாநகர பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

மேற்கண்ட அனைவரும் சிறப்பு முகாமுக்கு வந்து தடுப்பூசி போட்டு செல்லுமாறு மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் ரோட்டரி, லயன்ஸ் கிளப் மற்றும் தன்னார்வ, தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் பள்ளி- கல்லூரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள் ஒருங்கிணைந்து பொது மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, தடுப்பூசி போடாத நபர்களை கண்ட றிந்து சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News