ரெயில் நிலைய வளாகத்தில் கலெக்டர்-கமிஷனர் திடீர் ஆய்வு
- மீன் சிலை வைப்பது குறித்து ரெயில் நிலைய வளாகத்தில் கலெக்டர்-கமிஷனர் திடீர் ஆய்வு நடத்தினர்.
- மாணவர்களுக்கு தரப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார்.
மதுரை
தமிழகத்தில் பண்டைய காலத்தில் மதுரையை தலைநகரமாக கொண்டு பாண்டியர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் மீன் கொடி பொறித்த சின்னத்தை பயன்படுத்தி வந்தனர். இதனை நினைவுப்படுத்தும் வகையில் சில நாட்களுக்கு முன்பு மதுரை ரெயில் நிலையத்தில் மீன்களுடன் கூடிய அலங்கார நீரூற்று அமைக்கப்பட்டிருந்தது.
நிர்வாக காரணங்க ளுக்காக அந்த நிரூற்று அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் மீன்களுடன் கூடிய நிரூற்றை அமைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். மேலும் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் இன்று மதுரை ரெயில் நிலைய வளாக முகப்பு பகுதியில் மீன்களுடன் கூடிய அலங்கார நிரூற்று அமைப்பது தொடர்பாக கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார் ஆகியோர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
கமிஷனர் ஆய்வு
அதன்பின் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட திரவுபதி அம்மன் மாநகராட்சி ஆரம்ப பள்ளியின் முதல்-அமைச்ச ரின் காலை உணவு திட்டத்தை கமிஷனர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார். அப்ேபாது மாணவர்களுக்கு தரப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார்.