உள்ளூர் செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வத்தை நிர்வாகிகள் வரவேற்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு குறித்து அறிக்கை வெளியிடுவேன்

Published On 2023-02-05 08:23 GMT   |   Update On 2023-02-05 08:23 GMT
  • அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு குறித்து அறிக்கை வெளியிடுவேன் என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
  • மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., உள்பட பலர் உடனிருந்தனர்.

மதுரை

மதுரை விமான நிலையத்திற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்தார். அவரிடம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வு படிவம் குறித்து நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளிக்க மறுத்த ஓ.பி.எஸ். மாலை 3 மணிக்கு மேல் இதுகுறித்து அறிக்கை வெளியிடுவேன் என்று தெரிவித்தார்.

மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், வி.கே.எஸ்.மாரிசாமி, பி.எஸ்.கண்ணன், பேரவை குணசேகரன், சோலை இளவரசன், ராமநாதன், ஆட்டோ கருப்பையா, அர்ஜுன், கிரி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News