உள்ளூர் செய்திகள்

ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அ.தி.மு.க. முப்பெரும் விழாவில் 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்

Published On 2023-04-12 09:57 GMT   |   Update On 2023-04-12 09:57 GMT
  • திருச்சியில் வருகிற 24-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. முப்பெரும் விழாவில் 1 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்.
  • ஓ.பி.எஸ். அணி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மதுரை

மதுரை அ.தி.மு.க. புற நகர் வடக்கு மாவட்ட ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இளைஞரணி மாநில செய லாளர் ராஜ்மோகன், மாணவரணி துணை மாநில செயலாளர் ஒத்தகடை பாண்டியன், பேரவை மாநில இணைச்செயலாளர் சோலை குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன் பேசும்போது கூறியதாவது:-

வருகிற 24-ந் தேதி திருச்சியில் அ.தி.மு.க. 51-ம் ஆண்டு தொடக்க விழா, நிறுவனர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடை பெறுகிறது. இந்த விழா முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கை நாயகன் ஓ.பி.எஸ். கரத்தினை வலுப்ப டுத்தும் வகையில் மாநாடு போல நடைபெறும்.

இந்த விழாவில் அனைத்து நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும். மேலும் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து வரிசையாக வாகனங்களில் அணிவகுத்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

Tags:    

Similar News