உள்ளூர் செய்திகள்

வழிபாட்டு தலங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்

Published On 2023-07-29 08:15 GMT   |   Update On 2023-07-29 08:15 GMT
  • ஆடி தபசு, ஆடி பெருக்கை முன்னிட்டு வழிபாட்டு தலங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டுகின்றன.
  • தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 50 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

மதுரை

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக மதுரை மேலாண் இயக்குநர் ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வார இறுதி விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதை முன்னிட்டு திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாகவும், அதே போல் மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல். தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 50 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

மேலும் ஆடி பவுர்ணமி, ஆடிதபசு, ஆடி 18-ம் பெருக்கு திருவிழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம், மதுரை கோட்டம் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் 150 சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம், திருப்பரங்குன்றம் பவுர்ணமி கிரிவலம், சதுரகிரி, இருக்கன்குடி மாரியம்மன் கோவில், சங்கரன்கோவில், மடப்புரம், அழகர் கோவில், ஆடி 18-ம் பெருக்கு திருவிழா, குச்சனூர் சனி பகவான் கோவில், சுருளி தீர்த்தம், சடையாண்டி கோவில், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில், பழனி ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News