உள்ளூர் செய்திகள்
வாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
- வாளுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கண்மாய்க்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். உடனே போலீசார் அவரை விரட்டிச்சென்று பிடித்தனர்.
அந்த வாலிபரை சோதனையிட்டபோது வாள் வைத்திருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், பெரியார் நகரை சேர்ந்த அவர் கார்கி மகன் ஆதிகேசவன்(வயது22) என்பது தெரியவந்தது. அவர் எதற்காக வாளுடன் பதுங்கியிருந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.