உள்ளூர் செய்திகள்

ரூ.50 லட்சத்தில் டி.எம்.சவுந்தரராஜனுக்கு வெண்கல சிலை

Published On 2023-07-01 14:48 IST   |   Update On 2023-07-01 14:48:00 IST
  • ரூ.50 லட்சத்தில் டி.எம்.சவுந்தரராஜனுக்கு வெண்கல சிலை அமைக்க பூமிபூஜை செய்யப்பட்டது.
  • வெண்கல குரலில் கணீரென இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை.

மதுரை

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுக்கு பின்னனி பாடல்கள் பாடி புகழ் பெற்றவர் டி.எம்.சவுந்தர ராஜன். வெண்கல குரலில் கணீரென இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள சாலைக்கு அவரது பெயரை தமிழக அரசு அண்மையில் சூட்டியது.மேலும் அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரின் சொந்த ஊரான மதுரையில் அரசின் சார்பில் டி.எம்.சவுந்தரராஜனின் முழு திருவுருவச்சிலை அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தார்.

அதன்படி மதுரை முனிச்சாலை சந்திப்பில் டி.எம்.சவுந்தரராஜனின் வெண்கல சிலை ரூ.50 லட்சத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பூமிபூஜை இன்று நடந்தது. இதில் மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், வெங்க டேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் முகேஷ் சர்மா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் முனியசாமி, புகழ் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News