உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் திருடிய 2 பேர் சிக்கினர்

Published On 2023-05-02 13:28 IST   |   Update On 2023-05-02 13:28:00 IST
  • கோவில் திருவிழாவில் திருடிய 2 பேர் சிக்கினர்.
  • போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே அத்திப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இங்கு சாமி கும்பிடுவதற்காக அழகன்ராஜ் (வயது 63) என்பவர் நடந்த வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றார்.

சுதாரிக் கொண்ட அழகன்ராஜ் அங்கிருந்தவர்கள் உதவி யுடன் அந்த நபரை பிடித்து சாப்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த பிச்சைபாண்டி (51) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

அதே திருவிழாவிற்கு வந்திருந்த மாரியப்பன் (47) என்பவரிடம் ரூ.5 ஆயிரத்தை வழிப்பறி செய்து ஒரு வாலிபர் தப்பி செல்ல முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படை த்தனர். விசாரணையில் அவர் உசிலம்பட்டி அருகே உள்ள அய்யன்கோ வில்பட்டியை சேர்ந்த ரமேஷ் (40) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News