உள்ளூர் செய்திகள்
- மாடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- திருட்டுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
மதுரை வண்டியூர் பத்தினியம்மன் கோவில் தெரு அனுமார்பட்டியை சேர்ந்தவர் ராணி. சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான 2 பசுவை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பசுக்களை திருடியது வாடிப்பட்டி தாலுகா தெங்கரை சம்பத் மகன் செல்வம் (23), சோழவந்தான் நாராயணபுரம் ஆறுமுக மகன் விசுவநாத் (28) என தெரியவந்தது.
2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.