உள்ளூர் செய்திகள்

மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பதிலளிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்

Published On 2023-07-25 11:07 GMT   |   Update On 2023-07-25 11:08 GMT
  • தவறான சான்றுகளை கொடுத்து சட்ட விரோதமாக தேரூர் பஞ்சாயத்து தலைவராக உள்ள அமுதா ராணியை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.
  • புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை.

மதுரை:

கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி கவுன்சிலர் அய்யப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் தேரூர் பகுதியில் வார்டு எண் 8-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதே பேரூராட்சி வார்டு எண் 2-ல் அ.தி.மு.க. சார்பில் அமுதா ராணி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியானது பட் டியல் இனத்தவருக்கு ஒதுக் கப்பட்டு இருந்தது. ஆனால் கிறிஸ்தவரான அமுதாராணி தவறான சான்றுகளை நகராட்சி நிர்வாகத்திற்கு கொடுத்து தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர் கிறிஸ்துவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண் டுள்ளார்.

ஒருவர் இந்து, சீக்கியர் மற்றும் பௌத்தம் ஆகிய மதங்களைத் தவிர வேறு எந்த மதத்திற்கும் மாறியவுடன், அவர் பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியாது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய அமுதாராணி தேவாலயத்தில் தனது திருமணம் மற்றும் தனது குழந்தைகளின் சுபநிகழ்ச்சிகளை நடத்தினார்.

கிறிஸ்தவரான அமுதாராணி தன்னை பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என கூறி பஞ்சாயத்து தலைவர் பதவியை முறைகேடாக பெற்றிருப்பது சட்ட விரோதமானது. இந்த விவரங்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், தேரூர் கிராம செயல் அதிகாரி உள்ளிட்டோரும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை.

எனவே தவறான சான்றுகளை கொடுத்து சட்ட விரோதமாக தேரூர் பஞ்சாயத்து தலைவராக உள்ள அமுதா ராணியை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த நீதிபதி புகேழேந்தி முன் விசாரணை வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கு குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச் சித்துறை உதவி இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags:    

Similar News