உள்ளூர் செய்திகள்

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே அனைத்து குடியிருப்போர் நலசங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எம். புதூரில் புதிய பஸ் நிலையம் தீர்மானத்தை ரத்து செய்ய கோரி கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-23 08:54 GMT   |   Update On 2023-02-23 08:54 GMT
  • கடலூர், பாண்டி, சென்னை ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது./
  • இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கடலூர்

கடலூரின் நீர் ஆதாரமாய் விளங்கும் கொண்டங்கி ஏரியை மாசு படாமல் பாதுகாக்க வேண்டும். கடலூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையம் எம். புதூரில் அமையும் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். கடலூர், பாண்டி, சென்னை ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி, ரமணி, நடராஜன், புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. உதவி பொதுச் செயலாளர் தேவநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News