உள்ளூர் செய்திகள்
தஞ்சமடைந்த காதல் ஜோடி
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
- வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
- பெற்றோர் எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என எழுதிவாங்கி கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் கன்னிமானூத்து பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(24). 10-ம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளார். இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதேமில்லில் திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் சரளபட்டியை சேர்ந்த நாகேஸ்வரி(19) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய காதலர்கள் பழனியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தாங்கள் சேர்ந்து வாழ பாதுகாப்பு வழங்ககேட்டு வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இருவரும் மேஜர் என்பதால் இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு பெற்றோர் எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என எழுதிவாங்கி கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.