என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் ஜோடி தஞ்சம்"

    • இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியே ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
    • தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடிகள் இருவரும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள பண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது22). டிரைவரான இவருக்கும், பொம்மிடி அடுத்துள்ள பி.பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த நித்தியஸ்ரீ என்ப வருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடை வில் காதலாக மாறியது. இதனால் இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெற்றோர் களுக்கு தெரியவந்தது.

    இதனால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியே ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து இன்று காலை தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடியான சூர்யா, நித்தியஸ்ரீ ஆகிய இருவரும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
    • பெற்றோர் எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என எழுதிவாங்கி கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிமானூத்து பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(24). 10-ம் வகுப்பு வரை படித்து முடித்துள்ளார். இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதேமில்லில் திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் சரளபட்டியை சேர்ந்த நாகேஸ்வரி(19) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

    இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய காதலர்கள் பழனியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தாங்கள் சேர்ந்து வாழ பாதுகாப்பு வழங்ககேட்டு வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    இருவரும் மேஜர் என்பதால் இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு பெற்றோர் எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என எழுதிவாங்கி கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.

    ×