என் மலர்
உள்ளூர் செய்திகள்

எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்ஜோடியை படத்தில் காணலாம்.
தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
- இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியே ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
- தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடிகள் இருவரும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள பண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது22). டிரைவரான இவருக்கும், பொம்மிடி அடுத்துள்ள பி.பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த நித்தியஸ்ரீ என்ப வருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடை வில் காதலாக மாறியது. இதனால் இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெற்றோர் களுக்கு தெரியவந்தது.
இதனால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று வீட்டை விட்டு வெளியே ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து இன்று காலை தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடியான சூர்யா, நித்தியஸ்ரீ ஆகிய இருவரும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






