லாட்டரி சீட்டு விற்ற 7 பேர் கைது
- ஞானசேகர், நக்கல் பட்டியை நந்தகுமார், கணபதி உள்பட 7 பேரை கைது செய்தனர்.
- அவர்களிடமிருந்து 58 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லாட்டரி சீட்டுக் களை பறிமுதல் செய்தனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட கேரளா லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் துறைக்கு புகார் வந்தது.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி.ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாலக்கோடு பஸ் நிலையம், முருகன் கோவில் தெரு, எம்.ஜி.ரோடு, ஸ்தூபி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்று கொண்டிருந்த மேல் தெருவை சேர்ந்த சக்தி (45), திருமல்வாடியை சேர்ந்த ராஜ்குமார் (30), நக்கல் பட்டியை சேர்ந்த விஜய குமார் (31), அகராகரத் தெருவை சேர்ந்த அருளான ந்தம் (27), சுகர்மில் பகுதியை சேர்ந்த ஞானசேகர் (27) , நக்கல் பட்டியை நந்தகுமார் (23), கணபதி (32) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து 58 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் லாட்டரி சீட்டுக் களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்த னர்.