உள்ளூர் செய்திகள்
- லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதாக தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள தீர்த்தகிரியை சேர்ந்த செல்வம் (வயது57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதாக தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள தீர்த்தகிரியை சேர்ந்த செல்வம் (வயது57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.