உள்ளூர் செய்திகள்

பள்ளிபாளையத்தில் லாரி திருட்டு கர்நாடக வாலிபர் சேலத்தில் கைது

Published On 2023-05-06 09:39 GMT   |   Update On 2023-05-06 09:39 GMT
  • கன்னங்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார், நேற்று நள்ளிரவு கன்னங்குறிச்சி சின்ன முனியப்பன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
  • டாரஸ் லாரியை பள்ளிப்பாளையத்தில் இருந்து திருடி வந்த போது, வழி தெரியாமல் சின்ன முனியப்பன் கோவில் அருகே நின்றிருந்தபோது, போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தார்.

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார், நேற்று நள்ளிரவு கன்னங்குறிச்சி சின்ன முனியப்பன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அங்கு நின்றிருந்த ஒரு டாரஸ் லாரியின் மீது சந்தேகம் ஏற்பட்டு, லாரிக்குள் இருந்த நபரை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் கோரமங்களா ராஜேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்த பாஷா மகன் முகமது உரில்லா (வயது 37) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் அந்த டாரஸ் லாரியை பள்ளிப்பாளையத்தில் இருந்து திருடி வந்த போது, வழி தெரியாமல் சின்ன முனியப்பன் கோவில் அருகே நின்றிருந்தபோது, போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தார்.

இது குறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பள்ளிபாளையம் போலீசார் சேலத்திற்கு வந்து லாரியை பறிமுதல் செய்து, முகமதுவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

பிடிபட்ட டாரஸ் லாரி, நாமக்கல்லை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. போலீசார் பிடிபட்ட வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News