உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.

கூட்டுறவு சங்கத்தை பூட்டி வாடிக்கையாளர்கள் முற்றுகை

Published On 2022-07-27 09:11 GMT   |   Update On 2022-07-27 09:11 GMT
  • 5000 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
  • ஜனவரி மாதம் வரை, பயிர் கடன், நகை கடன், நீண்ட கால இட்டு வைப்பு உள்ளிட்டவற்றில் சுமார் ரூபாய் 3 கோடியே 52 லட்சம் முறைகேடு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளரி வெள்ளி ஊராட்சி பகுதியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த 5000 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.இதன் தலைவராக அதே பகுதியை சேர்ந்த சத்தியபானு இருந்து வருகிறார்.

இந்த சங்கத்தில் செயலாளராக இருந்த வேப்பமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் (வயது 55), கடந்த சில மாதங்களுக்கு முன் கூட்டுறவு சங்கத்தில் நிதி முறை கேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் விசாரணையில் சங்க செயலாளர் பொறுப்பில் இருந்த மோகன் கடந்த ஜனவரி மாதம் வரை, பயிர் கடன், நகை கடன், நீண்ட கால இட்டு வைப்பு உள்ளிட்டவற்றில் சுமார் ரூபாய் 3 கோடியே 52 லட்சம் முறைகேடு செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவர் மீது தொடர் புகார்கள் எழுந்து வந்து வரும் நிலையில், மோகன் மற்றும் முறைகேட்டில் தொடர்புடைய பிற அலுவலர்கள் குறித்து கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தில் முன் திரண்ட அதன் வாடிக்கையாளர்கள், தங்கள் கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்திருந்த நகை, மற்றும் ஈட்டு வைப்புத் தொகை உள்ளிட்டவற்றை உடனடியாக தங்களுக்கு திருப்பித் தரக் கூறி கூட்டுறவு சங்கத்தின் பிரதான கதவினை பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் சங்கத்தின் பொறுப்பு செயலாளர் மணி மற்றும் பூலாம்பட்டி போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News