உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது

Published On 2022-10-23 13:07 IST   |   Update On 2022-10-23 13:07:00 IST
  • சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் அரசம்பட்டு பகுதியில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் அருகே உள்ள அரசமரத்தடியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(வயது 42) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News