உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் பேசினார்.

மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி

Published On 2023-02-11 07:32 GMT   |   Update On 2023-02-11 07:32 GMT
  • வாழ்க்கையில் மாணவிகள் சாதித்து வெற்றி பெறுவது எப்படி?
  • பள்ளி- கல்லூரி விடுதி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம்- நாகை சாலையில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து மாணவ- மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார்.

நாகை மாவட்ட காப்பாளர் ஆசிரியர் சங்க தலைவர் வைரவமூர்த்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் கலந்து கொண்டு வாழ்க்கையில் மாணவிகள் சாதித்து வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து பேசினார்.

முன்னதாக தோப்புத்துறை பள்ளி மாணவ விடுதி காப்பாளர் விஸ்வலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.

இதில் திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் துணைக்கண்ணன், நல்லாசிரியர்கள் வீரப்பன், செங்குட்டுவன் மற்றும் திருத்துறைப்பூண்டி அலெக்சாண்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

வேதாரண்யம் அரசு கல்லூரி மாணவிகள் விடுதி காப்பாளார் கலைவாணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.முடிவில் நாகப்பட்டினம் பாலிடெக்னிக் விடுதி காப்பாளர் அகிலன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பள்ளி- கல்லூரி விடுதி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News