உள்ளூர் செய்திகள்

லட்சார்ச்சனை விழா நடந்தது. சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்த அங்காள பரமேஸ்வரி அம்மன்.

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா

Published On 2023-08-28 09:16 GMT   |   Update On 2023-08-28 09:16 GMT
  • உலக நன்மை வேண்டி 18-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடந்தது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த ராஜாளிகாடு பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி, விவசாயம் செழிக்கவும், மக்கள் நோயின்றி வாழ வேண்டி 18-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின், அம்மனுக்கு வெள்ளி அங்கி அணிவித்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர், பக்தர்களுக்கு பிரசாத பைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

கள்ளிமேடு கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டி மற்றும் லட்சார்ச்ச னை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News