உள்ளூர் செய்திகள்

கால்நடை மருந்தகங்களில் வெறிநாய் தடுப்பூசி தட்டுப்பாடு

Published On 2023-02-17 07:19 GMT   |   Update On 2023-02-17 07:19 GMT
  • 5 கால்நடை மருத்துவமனைகளும், 15-க்கும் மேற்பட்ட கால்நடை மருந்தகங்களும், 5-க்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவமனைகளும் உள்ளன. இவை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடு, மாடு கோழி நாய் உள்பட விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • இந்த நிலையில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் உள்பட ஒன்றியங்களில் சில வாரங்களாக வெறிநாய் தடுப்பூசி இல்லை. ஊசி போட நாயுடன் வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 5 கால்நடை மருத்துவமனைகளும், 15-க்கும் மேற்பட்ட கால்நடை மருந்தகங்களும், 5-க்கும் மேற்பட்ட கால்நடை உதவி மருத்துவமனைகளும் உள்ளன.

இவை மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடு, மாடு கோழி நாய் உள்பட விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முக்கியமாக மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், கோமாரி தடுப்பூசி, வயிற்றில் உள்ள புழுக்களை நீக்க மருந்து, வெறி நாய் கடி தடுப்பூசி ஆகியவை குறிப்பிட்ட இடைவெளியில் போடப்படுகிறது.

இந்த நிலையில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் உள்பட ஒன்றியங்களில் சில வாரங்களாக வெறிநாய் தடுப்பூசி இல்லை. ஊசி போட நாயுடன் வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

சிறப்பு முகாமில் வெறிநாய் தடுப்பூசி அனைத்தும் போடப்பட்டுவிட்டது என்றும், இனிமேல் வந்தால் தான் தடுப்பூசி போடப்படும் என்றும் கூறுவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே தேவையான தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News