உள்ளூர் செய்திகள்

வடலூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தொழிலாளி அரசு பஸ் மோதி பலி: 4 பேர் படுகாயம்

Published On 2023-07-02 13:22 IST   |   Update On 2023-07-02 13:22:00 IST
  • கோகுலுக்கு தலை யில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.
  • பஸ் மோதி விபத்துக்குள்ளானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கடலூர்:

வடலூர் எம்.ஆர்.கே பகுதியை சேர்ந்தவர் பால முருகன் மகன் கோகுல் (வயது 23). தெங்குத்து திருவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி மகன் ஜெகதீசன்(25).இருவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வட லூர்-பண்ருட்டி சாலை யில் சென்று கொண்டி ருந்தனர். அங்குள்ளள தனி யார் மருத்துவமனை அருகில் மோட்டார்சைக்கிள் சென்றபோது, இவர்களுக்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளி லிருந்து நிலைதடு மாறி கோகுல், ஜெகதீசன் ஆகியோர் கீழே விழுந்தனர். சாலையில் விழுந்த இவர்கள் மீது பண்ருட்டியில் இருந்து வடலூர் நோக்கி சென்ற அரசு பஸ் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கோகுலுக்கு தலை யில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இவர்கள் மீது மோதிய அரசு பஸ் தொடர்ந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மற்றும் சாலை ஓரமாக நடந்து சென்ற நபர் உள்பட 3 பேர் மீது மோதி விபத்துக்குள் ளானது. உடனே பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அலறினர். இந்த விபத்தில் ஆண்டி குப்பம் இளங்கோ நகரை சேர்ந்த குமார் (43), புவன கிரி வள்ளலார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (64), கடலூர் புதுநகரை சேர்ந்த குமார் மகன் மணி கண்டன் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் அங்கு வந்து பஸ் மோதி விபத்துக்குள்ளா னதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த கோகுல் உள்பட 4 பேரையும் மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரி ழந்த ஜெகதீசனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரி சோதனைக்காக குறிஞ்சிப் பாடி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News