உள்ளூர் செய்திகள்

வடபத்திரகாளி அம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு.

வடபத்ரகாளி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

Published On 2022-08-15 10:16 GMT   |   Update On 2022-08-15 10:16 GMT
  • விளக்கு பூஜைக்கு 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
  • தேசிய செயற்குழு உறுப்பினர் கண்ணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விளக்கு பூஜையை நடத்தினர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் வடக்கு வாசல் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் (மகிஷாசுரமர்த்தினி) தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையை திருக்கைலாய ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம் வாமதேவ சந்தானம் 28 -வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் ஆசியுரை வழங்கி விழாவினை தொடக்கி வைத்தார். இத்திருவிளக்கு பூஜைக்கு 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்தார்கள்.

திருக்கோயில் திருவிளக்கு பூஜைக்கு சரவணன் சுவாமிகள், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ராமமூர்த்தி, துணைத்தலைவர் டாக்டர் பழனி குமார், தஞ்சாவூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் மோகன், வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், வழிபாட்டு குழு முரளி, முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் கே. கண்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை நடத்தினர்.

Tags:    

Similar News