உள்ளூர் செய்திகள்

காட்டு யானையை விரட்ட கோவையில் இருந்து கும்கி யானை வரவழைப்பு

Published On 2022-06-08 16:16 IST   |   Update On 2022-06-08 16:16:00 IST
காட்டு யானையை விரட்ட கூடுதலாக 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

ஊட்டி, ஜூன்.8-

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டு பாறையைச் சேர்ந்த ஆனந்த்குமார் என்பவரை கடந்த மாதம் 26-ந் தேதி காட்டு யானை தாக்கிக் கொன்றது. பாரம் பகுதியில் மற்றொரு காட்டு யானை தாக்கி மும்தாஜ் என்பவர் பலியானார்.

இதைத்தொடர்ந்து ஊருக்குள் புகும் யானைகளை விரட்ட விஜய், சங்கர், கிருஷ்ணா, சீனிவாசன் ஆகிய கும்கி யானைகள் களமிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே கூடுதலாக கலீம் என்ற கும்கி யானை கோவையில் வரவழைக்கப்பட்டுள்ளது. கூடலூரில் இருந்து வசிம் என்ற யானை வந்துள்ளது.

இந்த யானைகள் மூலம் காட்டு யானைகளை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

Similar News