பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
கும்பகோணம் பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டி
- முதல் பரிசு பெற்றவர்களுக்கு தங்க பதக்கம், 2-ம் பரிசு பெற்றவர்களுக்கு வெள்ளி பதக்கம்.
- மாணவ- மாணவிகளுக்கு விளையாடும் திறனை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.
சுவாமிமலை:
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.
போட்டியில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பள்ளிகளில் இருந்து 150 மாணவ- மாணவிகள் சுமார் 9-க்கும் மேற்பட்ட குழுக்களாக கலந்து கொண்டனர்.
இக்குழுக்கள் மாணவ- மாணவிகளுக்கு என தனி பிரிவாகவும், 8, 10, 12, 14 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
போட்டியில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு தங்க பதக்கமும், 2-வது பரிசு பெற்றவர்களுக்கு வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.
போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு விளையாடும் திறனை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.
போட்டி ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் எஸ்.ஏ.கார்த்திகேயன் மற்றும் பூர்ணிமா கார்த்திகேயன் சிறப்பாக செய்திருந்தனர்.