உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை நடந்த காட்சி.

உடன்குடி கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் - நாளை நடக்கிறது

Published On 2023-11-23 08:36 GMT   |   Update On 2023-11-23 08:36 GMT
  • கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் புதிய வடிவமைப்பில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
  • இன்று காலை விக்னேஸ்வர பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, விசேஷந்தி ஹோமம் நடந்தது.

உடன்குடி:

உடன்குடி யூனியன் கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் புதிய வடிவமைப்பில் நவீன கலைநயத்துடன் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபி ஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனையொட்டி கடந்த 21-ந் தேதி மாலை பரிகார பூஜை நடந்தது.நேற்று காலை அனுக்ஞை, எஜமானர் சங்கல்பம், தேவதா சங்கல்பம், விநாயகர் பூஜை, புன்யா ஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, விநாயகர் ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரம்மா சாரிய பூஜை, தனபூஜை, கோ பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை யும் நடந்தது.

மாலையில் தீர்த்த சங்கிரஹணம், வாஸ்து சந்தி, பிரவேச பலி, மிருத சங்கிரஹரணம், பாலிஹாஸ்தா பனம், ரஷாபந்தனம், கலா கர்ஷணம், கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனை நடந்தது.

இன்று காலை விக்னேஸ்வர பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, விசேஷந்தி ஹோமம் நடந்தது. மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை, ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாகுதி, தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.

நாளை (வெள்ளிக் கிழமை) காலை 6 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, ஸ்பரு ஷாஹீதி, நாடிசந்தானம், நாமகரணம் ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி தீபாரா தனையும், காலை 8.15 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம்புறப்பட்டு முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விமான கலசத்திற்கு ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதில் ஊர் மக்கள் மற்றும் சுற்றுபுற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து காலை 10 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மகேஸ்வர பூஜையும், மாலை 6 மணிக்கு சஷர நாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலியும், 1008 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.

கும்பாபிஷேக நிகழ்ச்சி யை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் முத்து ஹரிஹர சுப்பிரமணியன் என்ற ஹரிஷ் பட்டர் நடத்துகிறார்.

ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு தலைவரும், முன்னாள் யூனியன் துணைத் தலைவருமான ராஜதுரை, செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பட்டுராஜன், துணை செயலாளர் தங்க ராஜ், துணை பொருளாளர் சேர்மத்துரை மற்றும் ஊர் பொது மக்கள் செய்து உள்ளனர்.

Tags:    

Similar News