உள்ளூர் செய்திகள்

பேரூர் பச்சாபாளையத்தில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-09 14:29 IST   |   Update On 2023-06-09 14:29:00 IST
  • கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம், விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது.
  • நேற்று அதிகாலை, 6 மணிக்கு, மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.

பேரூர்,

பேரூர் பச்சாபாளையம், ராம்ஜிஹில் வியூவில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கட்டப்பட்டது. பணிகள் முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம், விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து, இறை அனுமதி பெறுதல், கலச பூஜை, மகா கணபதி ஹோமம், மகா சுதர்சன ஹோமம், நவகிரக சாந்தி, வாஸ்து பூஜை உள்ளிட்டவை நடந்தன.

அதன் பின் புதிய விக்கிரகங்களுக்கு அபிஷேகம், சுவாமிகளுக்கு கண் திறப்பு நடந்தது. மாலையில் முளைப்பாரி, சீர் தட்டுகள் மற்றும் தீர்த்த குடங்கள் ஊர்வலம் நடந்தது.

இரவு, முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 6 மணிக்கு, மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 9.20 மணிக்கு, யாகசாலையில் இருந்து கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. காலை, 9.:30 மணிக்கு, பிரசன்ன வெங்கடேஷ் சுவாமிகள் தலைமையில், விமான கோபுரத்திற்கும், செல்வ விநாயகருக்கும், மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.

இதில் ராம்ஜிஹில் வியூ உரிமையாளர் ராம்ஜி, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பிரசாத், தர்மராஜா அருள் பீடம் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்திற்கான ராம்ஜிஹில் வியூ குடும்பத்தார், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News