உள்ளூர் செய்திகள்

 கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பேசிய காட்சி.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும் -கிழக்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் வலியுறுத்தில்

Published On 2022-10-23 12:59 IST   |   Update On 2022-10-23 12:59:00 IST
  • தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது.

இதற்கு மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியேர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் 2-வது முறை யாக தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பது. மத்திய அரசின் இந்தி திணிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும்.

அகற்ற தவறும் பட்சத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், சுகவனம், மாநில மகளிர் அணி தலைவர் காஞ்சனா கமலநாதன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், நாகராசன், சாமிநாதன்,கோதண்டன், அஸ்லம், சித்ரா சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News