உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி உதவினார். 

கிருஷ்ணகிரி புனித லூயிஸ் மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெறும் ஏழை மாணவிகளுக்கு ரூ.1.1 லட்சம் கல்வி உதவித்தொகை -ஐ.வி.டி.பி நிறுவனம் வழங்கியது

Published On 2022-11-29 15:05 IST   |   Update On 2022-11-29 15:05:00 IST
  • கல்விப் பணிகளிலும் பல வகையானச் சேவைகளைச் செய்து வருகிறது.
  • ஐ.வி.டி.பி நிறுவனம் ரூ.23.24 லட்சம் வழங்கியுள்ளது எனவும் ஐ.வி.டி.பி நிறுவனத்தலைவர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக மகளிர் மேம்பாட்டுப் பணிகளில் மட்டுமின்றி, சமூக அக்கறையோடு கல்விப் பணிகளிலும் பல வகையானச் சேவைகளைச் செய்து வருகிறது.

அதன்படி கிருஷ்ணகிரி, புனித லூயிஸ் மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெறும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய மாணவிகளின் கல்வி பயன்பாட்டிற்காகவும், அவர்களுக்கு உதவிடும் பொருட்டும், அம்மருத்துவமனையில் பயிற்சி பெறும் 11 மாணவிகளுக்கு தலா ரூ.10,000-என மொத்தம் ரூ.1.1 லட்சம் கல்வி உதவித் தொகையை ஐ.வி.டி.பி-யின் நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி உதவினார்.

மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி பேசிய ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகள் அர்ப்பணிப்பு உள்ளத்தோடும். சேவைமன ப்பான்மையோடும், மிகுந்தப் பொறுப்புணர்வோடும் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும் இதுவரை புனித லூயிஸ் மருத்துவமனையின் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்காக ஐ.வி.டி.பி நிறுவனம் ரூ.23.24 லட்சம் வழங்கியுள்ளது எனவும் ஐ.வி.டி.பி நிறுவனத்தலைவர் தெரிவித்தார்.

Similar News