உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 மாதங்களில் 1,425 டன் பட்டுக்கூடுகள் உற்பத்தி

Published On 2022-11-21 15:11 IST   |   Update On 2022-11-21 15:11:00 IST
  • கர்நாடகா மாநில கோலார், ராம்நகர் பட்டுக்கூடு அங்காடிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
  • 10 மாதங்களில் 1,425 டன் அளவில் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7432.65 ஏக்கர் பரப்பளவில் 3,720 விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தின் அதிகப்பட்ச மல்பெரி பரப்பு (15 சதவீதம்) இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.

இந்த ஆண்டில் கூடுதலாக 715 ஏக்கர் பரப்பளவில் 395 விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்துள்ளனர். குறிப்பாக கடந்த 10 மாதங்களில் 1,425 டன் அளவில் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகள், கிருஷ்ணகிரி, ஓசூர் பட்டுக்கூடு அங்காடிகளிலும், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம் பட்டுக்கூடு அங்காடிகளிலும், கர்நாடகா மாநில கோலார், ராம்நகர் பட்டுக்கூடு அங்காடிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

பட்டு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு, பட்டு வளர்ச்சித்துறை மூலம் மாநில திட்டத்தின் கீழ் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வீரிய ரக மல்பெரி ரகங்கள் நடவு மேற்கொள்வதற்கு 1 ஏக்கருக்கு, ரூ.10,500 வீதம், 5 ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது. 1,000 முதல் 1500 சதுர அடி அளவில் தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை நிறுவுவதற்கு, ரூ.1,20,000 மானியம் வழங்கப்படுகிறது.

எனவே, விவசாயிகள் தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் மானியங்களை பெற்று, பட்டு புழு வளர்ப்பு மற்றும் பட்டு கூடு உற்பத்தி செய்து குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News