உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை -ஒரே நாளில் 7 பேர் கைது
- போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
- 7 பேர் கஞ்சா விற்றுபோலீசாரிடம் சிக்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட னர்.
நாகரசம்பட்டி, கந்திகுப்பம், ஊத்தங்கரை, பர்கூர், சிங்காரப்பேட்டை, கல்லாவி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பூனம்மாள் (வயது 60), கார்த்திக் (21), தேவபிரகாஷ் (52), வாசுகி (45), ராஜா (60), ஆசிக் (25) ஆகிய 7 பேர் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்தபோது போலீசாரிடம் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.