மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி படுகாயம்
- கார் சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை
வேலாயுதம் பாளையம்
கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (61). விவசாயி . இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை கடக்கும்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி அதி வேகமாக வந்த கார் சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைத்திடுமாறி சரவணன் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மூலம் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சரவணனை கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இது குறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கோவை ரத்தினபுரி அருணா அபார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்த இளம்பரிதி மீது வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.