உள்ளூர் செய்திகள்

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2023-01-06 12:26 IST   |   Update On 2023-01-06 12:26:00 IST
  • கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது
  • இதில் விநாயகர் பூஜை மாங்கல்ய பூஜை, ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.

கரூர்:

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று காலை திருக் கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோவில் மண்டபத்தில் அலங்காரவல்லி சவுந்தரநாயகி உடன் மணக்கோலத்தில் பசுபதீஸ்வரர் எழுந்தருளினார். இதில் விநாயகர் பூஜை மாங்கல்ய பூஜை, ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.

பின்னர் பசுபதீஸ்வரருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் பூக்களை துாவி, சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து இன்று நடராஜருக்கு விசேஷ அபிஷேகமும், ஆராதனையும், பின்னர், ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Tags:    

Similar News