உள்ளூர் செய்திகள்

கரூர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

Published On 2023-06-12 13:42 IST   |   Update On 2023-06-12 13:42:00 IST
  • கரூர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர் :

தோட்டக்குறிச்சி சேங்கல்மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அப்போது பூஜையில் பக்தர்கள் தாங்கள் அணிந்திருந்த நகைகள், வாகனங்களின் சாவிகளை கொடுத்து திரும்ப பெற்று கொண்டனர். இதேபோல் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News