உள்ளூர் செய்திகள்
பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
- பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
கரூர்:
தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி செயல் திறன் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கிடுசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செயல்திறன் நிலை 1, நிலை 2 என்பதனை ஒன்றாக இணைக்க வேண்டும். பத்து வருட பணி செய்த தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 1996 விதிகளின்படி செயல் திறன் பணியாளர்களை களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.