உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

Published On 2022-08-01 06:33 GMT   |   Update On 2022-08-01 06:33 GMT
  • பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது
  • தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்றது

கரூர்:

தமிழ் வளர்ச்சித்துறை பேச்சுப் போட்டி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் வே.ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கரூர் மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி 10 தலைப்புகளில் மாணவர்கள் பேசினார்கள். போட்டியில் புகழூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவி சி.ரித்திஸ்ரீ முதலிடம், கரூர் பரணி வித்யாலயா மேல் நிலைப் பள்ளி 12ம் வகுப்பு மாணவர் ச.சாய்ரித்திக் 2ம் இடம், தம்மநாய்க்கன்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவி து.திவ்யதாரணி 3ம் இடம் பெற்றனர்.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுக்கு கரூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர் ஜோ.ரத்தினவேல்பாண்டி, மலைக்கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவி மு.திவ்யா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இம்மாணவர்களுக்கு முதற்பரிசாக ரூ.5,000, 2ம் பரிசு ரூ.3,000, 3ம் பரிசு ரூ.2,000, சிறப்பு பரிசு ரூ.2,000 வீதம் இரு மாணவர்களுக்கும் வழங்கப்படும். பரிசுத் தொகை காசோலை, பாராட்டுச் சான்றிதழ்கள் ஆட்சியரால் பின்னர் வழங்கப்படும்.

முதுகலைத் தமிழ் ஆசிரியர்கள் ந.உமாமகேஸ்வரி, ரா.தேவி, த.தேன்மொழி ஆகியோர் நடுவர்களாக பணிபுரிந்தனர். இப்போட்டிக்கான முன்னேற்பாடுகள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News