உள்ளூர் செய்திகள்

மகனுக்கு எழுதி கொடுத்த சொத்தின் மீதான உரிமையை ரத்து செய்ய பரிந்துரை

Published On 2022-06-22 08:41 GMT   |   Update On 2022-06-22 08:41 GMT
  • பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்ட மகனுக்கு எழுதி கொடுத்த சொத்தின் மீதான உரிமையை ரத்து செய்ய மூத்த குடிமக்களுக்கான தீர்ப்பாயம் நடவடிக்கை எடுத்துள்ளது.
  • பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்டார்

கரூர்:

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலை ராமானுஜம் நகரை அடுத்த தெற்கு குமரன் நகரைச் சேர்ந்தவர் பூவலிங்கம் (வயது 86) இவரது மனைவி பழனியம்மாள் (77) இவர்களுக்கு குமாரசாமி என்ற மகனும், இருமகள்களும் உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு பழனியம்மாள் பெயரில் இருந்த வீட்டை குமாரசாமியின் பெயருக்கு எழுதி கொடுத்துள்ளனர். அந்த வீட்டில் வசித்து வரும் குமாரசாமி முதல் தளததை ரூ.3 லட்சம் ஒத்திககும், 2-வது தளத்தை ரூ.8 ஆயிரம் வாடகைக்கும் விட்டுள்ளார்.

இந்நிலையில் குமாரசாமி தனது பெற்றோரைப் பராமரிக்காததுடன் அவர்களை வீட்டில் இருந்தும் வெளியேற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாடகை வீட்டில் வசிக்கும் பூவலிங்கம், பழனியம்மாள் தம்பதினர் இது தொடர்பாக கரூர் உதவி கலெக்டர், மூத்த குடிமக்களுக்கான தீர்ப்பாயத்தின் தலைவரிடமும் கடந்த ஜனவரி 28-ந்தேதி மனு அளித்தனர்.

அதில் மகனுக்கு தாங்கள் எழுத கொடுத்த சொத்தின் மீதான உரிமையை ரத்து செய்யக் கோரியும் பராமரிப்புத் தொகை பெற்றுத் தருமாறும் குறிப்பிட்டிருந்தனர். தீர்ப்பாயத்தின் அப்போைதய தலைவர் சந்தியா, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின் கீழ் பூவலிங்கம், பழனியம்மாள், குமாரசாமி ஆகியோரிடம் கடந்த மே 10,11 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணையில் தனது பெற்றோரின் பராமரிப்புச் செலவுக்கு மாதந்தோறும் ரூ.1,300 வழங்கி வருவதாகவும், அதை ரூ.2 ஆயிரம் ஆக அதிகரித்து வழங்க முடியு என்றும் அதற்கு மேல் பணம் வழங்க முடியாது என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குமாரசாமிக்கு எழுதிக் கொடுத்த வீட்டின் உரிமையை ரத்து செய்யக் கோரி பத்திரப்பதிவு செய்யப்பட்ட மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகம், மாவட்ட பதிவாளர் ஆகியோருக்கு தீர்ப்பாயத்தின் தலைவர் சந்தியா பரிந்துரை செய்துள்ளார்.    

Tags:    

Similar News